தனுஷின் அசுரன் படத்தில் விஜய்சேதுபதி இருக்காரா இல்லையா?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் அசுரன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தனுஷூடன் மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துவருகிறார்கள். சமீபத்தில் படத்தின் இறுதி ஷெட்யூல் ஷூட்டிங் நடந்துவருவதாக தனுஷ் தெரிவித்தார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துவருகிறார். வெற்றிமாறனின் அசுரன் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக ஒரு தகவல் பரவி வந்தது. இதுகுறித்து படக்குழு முதலில் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த செய்தி உண்மையும் இல்லை. இதை தற்பொழுது படக்குழு உறுதி செய்துள்ளது. அதுவும் வெற்றிமாறனே இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

More News >>