அடடே.. மரவள்ளிக்கிழங்கு போண்டா ரெசிபி
சுவையான மரவள்ளிக்கிழங்கு போண்டா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 2
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - அரை கப்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சமையல் சோடா - கால் டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 400 மில்லி
உப்பு
செய்முறை :
முதலில், மரவள்ளிக்கிழங்கை நன்றாக கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பின்னர், தோலை சீவி நறுக்கி நன்றாக வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, சமையல் சோடா, தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு நன்றாக கலந்துகொள்ளவும்.
வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம்பருப்பு, கடுகு போட்டு தாளித்தப்பிறகு பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதங்கியதும் மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.
அத்துடன் நறுக்கிய கொத்தமல்லிதழை, கறிவேப்பிலை சேர்த்து கிளறி எடுக்கவும்.பிறகு இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை மாவுக் கலவையில் முக்கி அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.
அவ்ளோதாங்க சுவையான மரவள்ளிக்கிழங்கு போண்டா ரெடி..!