சபாநாயகருக்கு தடை போடணும்...! தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் வழக்கு
தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். ஏற்கனவே திமுகவும் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இரு வழக்குகளும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
தினகரன் தரப்புக்கு ஆதரவாக உள்ள அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் இப்போது உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. திமுக சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளதால், அவர் 3 எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது, தடை விதிக்க வேண்டும் என்று இன்று வழக்குத் தொடரப்பட்டு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.
இதே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சுட்டிக் காட்டி,அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேர் சார்பிலும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய, இந்த வழக்கும் திங்கட் கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. திமுக மற்றும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தொடர்ந்த இரு வழக்குகளும் ஒன்றாக திங்கட்கிழமை விசாரணைக்கு வருவதால், சபாநாயகர் நடவடிக்கை எடுக்கலாமா?கூடாதா? என்பதில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பிக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிருப்தி எம் எல்ஏக்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர், சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் தங்களுக்கு கிடைத்ததாகவும், சட்ட ஆலோசனை பெற்று உரிய விளக்கம் அளிக்கப் போவதாகவும் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், தங்களுக்கு இந்தப் பதவியை கொடுத்தவர் ஜெயலலிதா தான் என்றும், அந்தப் பதவியைப் பறிக்க ஜெயலலிதாவைத் தவிர வேறு யாருக்கும் உரிமை கிடையாது என்றும் தெரிவித்தனர்.
185 பக்க நோட்டீஸ் ..! சமரசமா..? பிடிவாதமா..? என்ன பதில் சொல்வது...! குழப்பத்தில் 3 எம்எல்ஏக்கள்