தமிழிசைக்கு குட்பை சொல்லும் நேரம்..! அடுத்த பா.ஜ.க. தலைவர் நானே..!

தமிழக பாஜக தலைவர் தேர்வு செய்யும் நேரம் நெருங்கி விட்டது என்றே கூறலாம். தற்போதைய பாஜக-வின் மாநில தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருக்கிறார். இவரின் பதவிக் காலம் இன்னும் சில மாதங்களில் முடியப்போகிறது.

முன்னதாக, மாநிலத் தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த 2014-ல் மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதனால், தமிழிசை சவுந்தரராஜன் மாநில தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். தன்னுடைய, பதவி காலம் முடிவடைந்த பிறகும் மீண்டும் அவர் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு முறை தமிழக பாஜக மாநிலத் தலைவர் ஆனார் தமிழிசை.  

இந்நிலையில், தமிழிசை சவுந்தரராஜனின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில்  இருப்பதால், அந்த பதவியை பிடிக்க பாஜக-வின் முக்கிய புள்ளிகள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த ரேசில், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் முந்தியடித்து ஓடுகின்றனர் என பஜாக வட்டாரங்கள் கூறுகின்றன.

மாநிலத் துணைத் தலைவராக உள்ள வானதி சீனிவாசன், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அவருக்கு தலைவர் பதவி வழங்க வாய்ப்பு அதிகம். இவருக்கு எதிராக கட்சியில் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லையென்றாலும் மீண்டும் ஒரு பெண் தலைவரா? என்ற எண்ணம் நிச்சம் தோன்றும்.

இந்த ரேசில், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவாளர் முருகானந்தம் ஆகியோரும் உள்ளார்கள். முருகானந்த்திற்கு கட்சிக்குள் எதிர்ப்பு, ஹெச்.ராஜாகோ கட்சியையும் தாண்டி மக்கள் மத்தியில் பரவலாக அதிருப்தி. இருவரும், பரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளது. அதே போல், நயினார் நாகேந்திரன் மற்றும் மதுரை பேராசிரியர் சீனிவாசன் இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் அல்லது சீனிவாசன் இவர்களில் ஒருவர் ரேசில் ஜெயிக்கலாம். அரசியலில் எப்போது என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாது அல்லவா...? அதனால், மீண்டும் தமிழிசைக்கே வாய்ப்பு வழங்கப்பட்டாலும் அச்சரிய பட வேண்டிய அவசியம் இல்லை. 

More News >>