தாகம் தீர்க்க இதை செய்வார்களா அவர்கள்? சாமானியனின் குரல்

கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பிற மாவடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலைதூக்கி உள்ளது. சென்னையில் பல இடங்களில் காலை நான்கு மணிக்கே காலிக் குடங்களுடன் மக்கள் தண்ணீர்க்காக காத்திருக்கும் அவல நிலை. இராமநாதபுரம் உள்ளிட்ட  மாவட்டங்களை சொல்லவே வேண்டாம். 365 நாளும் குடிநீர் தட்டுப்பாடுதான்.

''அமைச்சர் நிதின் கட்கரி சென்னை வரும் சமயங்களில் எல்லாம் தவறாமல் சொல்லும் வார்த்தை, கோதாவரியையும் காவிரியையும் இணைத்து சென்னை மற்றும் தமிழகத்தின் பற்றாக்குறையை தீர்த்துவைப்போம் என்று குறிப்பிடுவார். அதனுடன், நதிகள் இணைப்பிற்காக ஒரு கோடி ரூபாய் தருவதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

கோதாவரி காவிரி இணைப்பு ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்திற்கும் ஆந்திராவிற்கும் இடையே 1983-ம் ஆண்டு போடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி தமிழகத்திற்கு ஆண்டுக்கு 5 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும். அது தமிழகத்தை வந்தடையும்போது 12 டிஎம்சி கிடைக்கும். குறிப்பிட்ட 12 டிஎம்சியில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டங்களில் 4 டிஎம்சியும், ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 8 டிஎம்சியும் ஆந்திர தரவேண்டும் என்கிறது ஒப்பந்தம்.

1983-ம் ஆண்டு தொடங்கிய பணிகள் 1990-ம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது,  ஆனால் 1996-ம் ஆண்டுதான் பணிகள் ஓரளவிற்கு நிறைவுபெற்றன. 1996-ம் ஆண்டு ஆண்டு முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் கிருஷ்ணா நதியிலிருந்து தமிழகத்திற்கு சுமார் 288 டிஎம்சி தண்ணீர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைத்தது என்னவோ 76 டிஎம்சி தான்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை தமிழகத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய 4 டிஎம்சி நீரில் நமக்கு கிடைத்திருப்பது வெறும் 0.8 டிஎம்சி மட்டுமே. ஆகையால், தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒப்பந்தத்தின் படி தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய 3.2டிஎம்சி தண்ணீரையாவது பெற்றுத்தருவார்களா?''

இப்படி கேள்வியுடன் முடியும் இந்த பதிவானது, தற்போது  இணையதள வாசிகள் மத்தியில் பேசும் பொருளாகி, வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

`வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம்; பிசிசிஐயின் புதிய கோரிக்கை' - ஒத்திவைக்கப்பட்ட பயணம்
More News >>