இதுக்கு மேலயும் லேட் பண்ணா நல்லா இருக்காது நயன்தாராவின் இந்த திடீர் யோசனை எதுக்கு தெரியுமா?

அஜித்துடன் விஸ்வாசம் படத்தை முடித்த நயன்தாரா விஜய்யுடன் தளபதி 63, ரஜினியுடன் தர்பார் மற்றும் சூர்யாவுடன் ஒரு படம் என படுபிசியாக நடித்து வருகிறார்.

34 வயதாகும் நயன்தாரா சில வருடங்களாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் இணைந்து செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், திருமணம் குறித்த எந்த பேச்சையும் இதுவரை வெளிப்படையாக அறிவிக்க வில்லை.

அண்மையில் நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய சர்ச்சை பேச்சு, நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த முடிவுகளை விரிவுபடுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக இரு வீட்டாரும் பேசி முடிவு செய்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

எழுத்துக்காக எந்த எண்ட் வேணும்னாலும் போகலாமா? கே13 விமர்சனம்!
More News >>