36 வயதினிலே த்ரிஷா பிறந்த நாளை எங்கே கொண்டாடுகிறார் தெரியுமா?
நடிகை த்ரிஷாவுக்கு சினிமாவில் 16 வயது என்றால், நிஜ வாழ்வில் நாளையுடன் 36 வயது ஆகிறது. தனது 36வது பிறந்த நாளை தனது குடும்பத்துடன் பாங்காக்கில் கொண்டாடி வருகிறார் நடிகை த்ரிஷா.
சென்னையில் 1983ம் ஆண்டு மே 4ம் தேதி பிறந்தவர் த்ரிஷா. ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்த த்ரிஷா, படிப்படியாக நாயகியாக முன்னேறி, தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக மாறியவர்.
சாமி படத்துல வந்த மிளகாய் பொடி மாமியையும், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வந்த ஜெஸியையும் மறக்க முடியாமல் தவித்த இளைஞர்களுக்கு, கடந்த ஆண்டு ஜானுவாக நடித்து மீண்டும் பல ஆண்டுகளுக்கு இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறியுள்ளார்.
த்ரிஷாவின் அந்த க்யூட்டான சிரிப்புக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த படத்தை பார்க்கலாம் என த்ரிஷாவின் படங்களை காண ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.
நாளை 36வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகை த்ரிஷாவுக்கு தற்போதே சமூக வலைதளங்களில் பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். நடிகை த்ரிஷா தனது குடும்பத்துடன் இந்த ஆண்டு பிறந்த நாளை பாங்காக்கில் கொண்டாடி வருகிறார். தற்போது, குடும்பத்துடன் நடிகை த்ரிஷா உணவு அருந்தும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
த்ரிஷாவிடம் நாங்கள் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான்.. ஜானுவை மறக்கடிக்கும் அடுத்த கதாபாத்திரத்தை விரைவில் தாருங்கள் என்று தான்.
50 நாளைக்கு முன்பே இந்த அலப்பறையா? இந்தியளவில் டிரெண்டான தலைவா விஜய்!