60, 175ஐ தொடர்ந்து ஜிம்னாஸ்டிக் டாக்டருக்கு 125 ஆண்டுகள் சிறை

வாஷிங்டன்: ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வழக்கில் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் டாக்டருக்கு கூடுதலாக 125 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் ஜிம்னாஸ்டிக் கிளம் மற்றும் மிச்சிகன் மாகாண பல்கலைக் கழக விளையாட்டு துறையில் டாக்டராக இருந்தவர் லார்ரி நாசர்.

இவர் இந்த பணியில் இருந்தபோது, இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து லார்ரிக்கு எதிராக சுமார் 265க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் செய்தனர். இதனால், லார்ரியை கைது செய்த போலீசார் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லார்ரிக்கு ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் 60 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், கடந்த ஜனவரி மாதம் அவருக்கு 175 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில், இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.அதில், லார்ரிக்கு மேலும் 40 முதல் 125 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்மூலம் லார்ரிக்கு இதுவரை 300 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>