நேற்று விஜய்க்கு நடந்தது இன்று விஜய் சேதுபதிக்கு நடந்துவிட்டது.. படப்பிடிப்பு அரங்குகள் நாசமானதற்கு என்னதான் காரணம்

சென்னையில், நேற்று நடிகர் விஜய் படப்பிடிப்பு அரங்கில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்ட நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்பிலும் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிக்கும் 63வது படத்தை டைரக்டர் அட்லி இயக்குகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில், அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. நேற்று பிற்பகல் 1 மணியளவில் படப்பிடிப்புக்காக புதிதாக அரங்குகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்த பகுதியில் காய்ந்த மரக்கழிவுகள் மற்றும் இலைகள் கிடந்தன. இரும்பு கம்பிகள் வெல்டிங் வைக்கப்படும்போது அதில் இருந்து பறந்த தீப்பொறி காய்ந்த இலைகளில் பட்டு தீப்பற்றியது. மற்ற அரங்குகளிலும் தீ பரவியது. அரங்கில் மரப்பலகைகள் அதிகம் இருந்ததால் அரங்குகளில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் ஏற்பட்ட சேதம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. அங்கிருந்த 25க்கும் மேற்பட்ட சினிமா அரங்குகள் நாசமாகியுள்ளது என்னும் தகவல் மட்டும் வெளியானது. அவ்வளவு பெரிய இடத்தில் தீ விபத்து போன்ற அவசர காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படவில்லையாம். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது விஜய் சேதுபதியில் படப்பிடிப்பில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சயீரா படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதமாக நடிகர் சிரஞ்சீவி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்ததால் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்றுதான் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. சிரஞ்சீவியின் பண்ணை வீட்டில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டதாம். அங்கு ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் பிரமாண்ட செட் தீயில் கருகி நாசமாகிவிட்டது. அதன் மதிப்பு 2 கோடி ரூபாய் என்று படக்குழு தெரிவித்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது யாரெல்லாம் படப்பிடிப்பில் இருந்தார்கள் என்னும் தகவல் இன்னும் வெளியாகவில்லை. அவ்வளவு பெரிய அரங்கு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இடத்தில் போதுமான தண்ணீர் வசதியோ தீயணைக்கும் வசதியோ இல்லை என்பதே பொருள் சேதத்துக்கு காரணம்.

More News >>