உங்களுக்காக ஜவ்வரிசி உப்புமா ரெசிபி

உடலுக்கு நன்மை தரும் ஜவ்வரிசி உப்புமா எப்படி செய்றதுனு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி 200 கிராம்

வறுத்த வேர்க்கடலை 100 கிராம்

பொடியாக நறுக்கிய கேரட் - ஒரு சிறிய கிண்ணம்

தோல் உரித்த பச்சைப் பட்டாணி - ஒரு சிறிய கிண்ணம்

பொடியாக நறுக்கிய பச்சை, சிவப்பு, மஞ்சள் குடைமிளகாய் - ஒரு கிண்ணம்

பெரிய வெங்காயம் - ஒன்று

இஞ்சி விழுது, மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்

வறுத்து பொடி த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஜவ்வரிசியை தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து எடுக்கவும்.

வாணலியில் நெய் விட்டு சூடானதும் பச்சை பட்டாணி, நறுக்கிய கேரட், குடமிளகாய், வெங்காயம், இஞ்சி விழுது, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, ஜவ்வரிசி, வறுத்த வேர்க்கடலையை போட்டு கிளறவும். எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்தவுடன் பொடித்த வேர்க்கடலையை சேர்த்து நன்றாக கிளறவும்.

பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.

அவ்வளவுதான் சுவையான ஜவ்வரிசி உப்புமா ரெடி..!

More News >>