சுவையான வாழைத்தண்டு மோர்க்கூட்டு ரெசிபி

அனைவருக்கும் பிடித்த வாழைத்தண்டு மோர்க்கூட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு 1

புளிக்காத கெட்டித் தயிர் 100 மில்லி

பச்சை மிளகாய் ஒன்று

தேங்காய் துருவல் ஒரு சிறிய கிண்ணம்

உப்பு ஒரு டீஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

முதலில் வாழைத்தண்டை தோல் சீவி நீளமாக நறுக்கி நாரை நீக்கி கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும்.

பின்னர் பச்சை மிளகாய் தேங்காய் இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை தயிருடன் கலக்கவும். பின்னர் வேகவைத்த வாழைத்தண்டுடன் அரைத்த விழுதை கலக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து வாழைத்தண்டு கலவையில் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

அவ்வளவுதாங்க சுவையான வாழைத்தண்டு மோர்க் கூட்டு ரெடி..!

More News >>