பல நாள் பட்டினியால் மண்ணை தின்ற பச்சிளம் குழந்தை பலி

ஆந்திர மாநிலத்தில் பசிக்கொடுமையால் குழந்தை ஒன்று மண்ணை தின்றதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டம் குதிபண்டலா கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் மகேஷ் - நீலவேணி. கடும் வறுமையில் வாடும் இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், நீலவேணி தனது சகோதரியின் 2 வயது குழந்தையையும் சேர்த்து வளர்த்து வந்துள்ளார். சில நாட்களாக ஒரு வேளை உணவு கூட இல்லாமல் தவித்து வந்த நிலையில், அந்த 2 வயது குழந்தை பசிதாங்காமல் மண்ணை தின்று உயிரிழந்து விட்டது. இதனால் செய்வதறியாமல் திகைத்த மகேஷ் தம்பதியினர் யாருக்கும் தெரியாமல் குழந்தையை புதைத்துள்ளனர்.

தகவலறிந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது நெஞ்சை பதற வைக்கும் மற்றொரு தகவலும் கிடைத்தது. கடந்த வருடம் அவர்களது மூன்றாவது குழந்தையும் பசியால் மண்ணை தின்று உயிரிழந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்த 4 குழந்தைகளையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளனர். பசிக்கொடுமையால் மண்ணை தின்று குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்ல உங்க வேலையை ஒழுங்க செய்யுங்க.. ரிப்போர்டரின் மூக்கை உடைத்த வரலட்சுமி
More News >>