வெப் சீரிஸில் விருப்பமில்லை படத்தில் மட்டுமே நடிப்பேன் மஞ்சிமா பிடிவாதம்!
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.
அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து மஞ்சிமா நடித்த எந்த படமும் சரியாக போகவில்லை. தற்போது கெளதம் கார்த்திக்குடன் அவர் நடித்துள்ள தேவராட்டம் படம் பல சர்ச்சைகளை கடந்து திரையில் ஓடிக் கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை மஞ்சிமா மோகன், நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கவே விருப்பப்படுகிறேன். ஜெயலலிதாவாக நடிக்க ரொம்ப ஆசை. ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
கெளதம் மேனன் இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு குறித்த வெப் சீரிஸில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், வெப் சீரிஸ் எனக்கு செட்டாகாது என சொல்லி தவிர்த்து விட்டேன் என்றார்.
பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் எல்லோரும் வெப் சீரிஸில் ஆர்வத்துடன் நடித்து வரும் நிலையில், மஞ்சிமா மோகன், வெப் சீரிஸ் வேண்டாம் என்று சொல்வது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
‘19 படங்கள் கைவசம்' தமிழ் சினிமாவில் யோகிபாபு அசூர வளர்ச்சி!