அமெரிக்காவில் ஆற்றுக்குள் பாய்ந்த விமானம் ...! 142 பேர் உயிர் தப்பிய அதிசயம்!

அமெரிக்காவின் புளோரிடாவில் 142 பேருடன் தரையிறங்கிய போயிங் விமானம், ஓடுபாதையிலிருந்து விலகி ஆற்றுக்குள் பாய்ந்தது. ஆற்றுக்குள் கால் பகுதி மட்டுமே விமானம் மூழ்கியதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன் வில்லே நகரின் விமான நிலையத்தில் மியாமி ஏர்லைன்சுக்குக் சொந்தமான போயிங் 737 ரக பயணிகள் விமானம் தரையிறங்கியது. 136 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் தரையிறங்கிய விமானம், ஒடுபாதையில் வேகமாகச் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து, அருகில் ஓடும் செயின்ட் ஜான்ஸ் நதிக்குள் பாய்ந்தது.

நல்ல வேளையாக ஆற்றில் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் விமானம் மூழ்க வில்லை. விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் 142 பேரும் பத்திரமாக இருப்பதாக ஜாக்சன் வில்லே நகர மேயர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவசர கால மீட்புப் படையினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டதாகவும் மேயர் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக போயிங் 737 ரக விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது சகஜமாகி விட்டது. இதனால் இந்தியா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் போயிங் 737 ரக விமானங்களுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச தீவிரவாதியாக மசூத் அசார்..! யார் இவர்..? காரணம் என்ன?
More News >>