ஒரு டான் ஸ்டோரி பண்ணனும்... அஜித்தின் திடீர் ஆசை
அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது. இந்நிலையில் அஜித்தை இயக்கவிருக்கும் இயக்குநர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியில் வெளியாகி பெரும் ஹிட்டான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை. இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ரோலில் தான் அஜித் தமிழில் நடித்திருக்கிறார். டாப்ஸி கேரக்டரில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஏற்கெனவே போனி கபூருக்கு அஜித் இரண்டு படங்கள் நடிப்பதாக வாக்கு கொடுத்த நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் ஹெச்.வினோத் தான் மீண்டும் அஜித்தை இயக்குகிறார். அதாவது, அஜித்தின் 59 மற்றும் அஜித் 60 படங்களை அவரே இயக்குகிறார். இந்நிலையில் அஜித் 61 படத்தை யார் இயக்குகிறார் என்பதே மில்லியன் டாலர் கேள்வி. ஒரு பக்கம் விஷ்ணுவர்தன் என்றால் மற்றுமொரு பக்கம் சிறுத்தை சிவா பெயர்கள் அடிபட்டுவருகிறது. ஆனால் விஷ்ணுவர்தன் இந்தியிலும், கார்த்தியை இயக்க சிவாவும் தயாராகிவருகிறார்கள். அஜித்தின் 61வது படத்தை விக்ரம் வேதா இயக்குநர்களான புஷ்கர் காயத்ரி இயக்கவிருக்கிறார்கள். அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் தான் போய்க் கொண்டிருக்கிறதாம். அதனால் தான் புஷ்கர் காயத்ரி எந்த படத்துக்கும் கமிட்டாகாமல் இருக்கிறார்கள். விக்ரம் வேதா போலவே ஒரு டான் ஸ்டோரியை பண்ணுமாறு கேட்டிருக்கிறாராம் அஜித். விரைவில் இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை எதிர்பார்க்கலாம்.