ருசியான கீரை பப்ஸ் ரெசிபி

வீட்டிலேயே சுவையான கீரை பப்ஸ் எப்படி செய்றதுனு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பாலக்கீரை ஒரு கட்டு

க்ரீம் சீஸ் அரை கப்

ஸ்ப்ரிங் ரோல் சீட் 10

மைதா பேஸ்ட் அரை கப்

மிளகுத்தூள்

உப்பு

எண்ணெய்

செய்முறை:

பாலக் கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பாலக் கீரையை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

அதன் தண்ணீரை வடித்து பிழிந்து அத்துடன் உப்பு, மிளகுத்தூள், க்ரீம் சீஸ் சேர்த்து கலக்கவும்.

இந்தக் கலவையை 10 சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

வாணலியில் மிதமான சூட்டில் எண்ணெயை ஊற்றி காய வைக்கவும்.

ஸ்ப்ரிங் ரோல் சீட் விரித்து அதன் நடுவில் கீரை கலவையை வைத்து சுற்றிலும் மைதா பேஸ்டை தடவி மூடிவிடவும்.

இதனை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான கீரை பப்ஸ் ரெடி..!

More News >>