பிரஷ் கிரீம் பாலக் சூப் ரெசிபி

உடலுக்கு சக்தி தரும் பாலக்கீரை சூப் எப்படி செய்றதுனு பார்க்கலாம்..

 

தேவையான பொருட்கள்:

பாலக்கீரை ஒரு கட்டு

வெங்காயம் ஒன்று

பூண்டு 4 பல்

ஆலிவ் ஆயில்

சீரகம் ஒரு டீஸ்பூன்

ஃப்ரெஷ் கிரீம் கால் கப்

மிளகுத்தூள்

உப்பு தேவையான அளவு

செய்முறை:

முதலில் கீரையை சுத்தம் செய்து தண்டுகளோடு நறுக்கிக் கொள்ளவும்.

பிறகு வெங்காயத்தை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தை தாளித்து அத்துடன் வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் கீரை, பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.

இந்தக் கலவை நன்றாக வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து பின்னர் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

இந்தக் கலவையை மீண்டும் கடாயில் ஊற்றி பிரஷ் கிரீம் மிளகுத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

அவ்வளவுதான் சுவையான பாலக் சூப் ரெடி..!

More News >>