வித்யாசமான முட்டை சப்பாத்தி ரெசிபி

வித்தியாசமா முட்டை சப்பாத்தி ரெசிபியை எப்படி செய்வதென்று இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி - 2

கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்

முட்டை - 2

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

சில்லி ப்ளேக்ஸ்- அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு

கொத்தமல்லி

எண்ணெய்

செய்முறை:

ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.

அத்துடன் கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு சப்பாத்தியை அதில் போட்டு அதன் மீது முட்டை கலவையை முன்னும் பின்னும் தடவி வேக வைத்து எடுக்கவும்.

அவ்வளவுதாங்க சுவையான முட்டை சப்பாத்தி ரெடி..!

More News >>