தல, தளபதியுடன் நடிக்கணும் இது சூப்பர் குளோப் அழகியின் ஆசை!
கேரளாவில் நடந்த மிஸ் சூப்பர் குளோப் இந்தியா அழகிப் போட்டியில் சென்னையை சேர்ந்த அக்ஷரா ரெட்டி மகுடம் சூடினார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரஜினிகாந்த், அஜித், விஜய் மற்றும் சூர்யாவுடன் நடிக்க ரெடியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த வாரம் நடந்த ’மிஸ் சூப்பர் குளோப் இந்தியா-2019’ அழகிப்போட்டியில் சென்னையை சேர்ந்த அக்ஷரா ரெட்டி 240 பேர் கலந்து கொண்ட போட்டியில் போட்டியிட்டு மகுடம் சூடினார். தமிழகத்தின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அக்ஷரா ரெட்டி சென்னைக்கு வருகை தந்தபோது, அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அக்ஷரா ரெட்டி, தமிழ் சினிமா நடிகர்களை மிகவும் பிடிக்கும். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித் மற்றும் சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க ஆசை என்று கூறினார்.
24வயதாகும் அக்ஷரா ரெட்டி, கேராளாவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து துபாயில் வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள ’மிஸ் சூப்பர் குளோப் வேல்ர்ட்-2019’ போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.
ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா வரிசையில் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு அழகி பட்டம் வென்ற அழகு தேவதை அக்ஷ்ரா ரெட்டி நாயகியாக விரைவில் வரப் போகிறார்.
தீப்பிடித்த ரஷ்ய விமானம் ..! 37 பேரை காப்பாற்றிய விமானி...! கடைசி ஆளாக குதித்த துணிச்சல்..!