அய்யோ.. விஷ்ணு விஷாலுக்கு என்ன ஆச்சு?
நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அய்யோ.. விஷ்ணு விஷாலுக்கு என்ன ஆச்சு? என்று தான் கேட்க தோன்றும்.
ராட்சசன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஷ்ணு தயாரித்து நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில், பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். தமிழில் காடன் என்ற பெயரிலும், தெலுங்கில் ஆரண்யா என்ற பெயரிலும் படம் இரு மொழிகளில் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை தான் விஷ்ணு விஷால் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
முழுதும், மண் புழுதியில் புரண்டு எழுந்த தோற்றத்தோடு விஷ்ணு விஷால் இருக்கிறார். இவ்வளவு கஷ்டத்துக்கும் கூடிய சீக்கிரம் நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.
3 எம்எல்ஏக்கள் விவகாரம்... சபாநாயகருக்கு தடை ... உச்ச நீதிமன்றம் அதிரடி!