வாடிக்கையாளர்களைக் கவர அதிரடி ஆஃபர்கள்: ஜியோக்குப் போட்டியாக வோடஃபோன்

டெலிகாம் துறையில் ஜியோவின் வருகைக்குப் பின்னர் மற்ற செல்போன் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களைக் கவருவைதைக் காட்டிலும் இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பதே பெரும் சவலாக உள்ளது.

ஜியோ ஆஃபர்களுக்குப் போட்டியாக ஏர்டெல் சமீபத்தில் பல ஆஃபர்களை வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்துத் தற்போது வோடஃபோன் நிறுவனமும் களத்தில் குதித்துள்ளது.

ஜியோ போலவே 399 ரூபாய்க்கான ஆஃபர்களை வோடஃபோன் அறிவித்துள்ளது. இது முன்னரே வோடஃபோன் வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் வோடஃபோன் ரெட் என்ற புதியத் திட்டத்துக்கு மாற நினைப்பவர்களுக்கான ஆஃபர் ஆக உள்ளது.

இந்த ஆஃபரில் 399 ரூபாய்க்கு 30 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லா அழைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே திட்டத்தை வேற செல்போன் நிறுவனத்திலிருந்து வோடஃபோன் ரெட் திட்டத்துக்கு மாற நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வோடஃபோன் வழங்க உள்ளது.

குறிப்பாக இந்தியாவில் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே இத்திட்டம் வழங்கப்படும் என்றும் கூடிய விரைவில் நாடு முழுவதும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆந்திரா, மத்தியப்பிரதேசம், பிஹார், ஜார்கண்ட், காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆஃபர் தற்போதைக்கு வழங்கப்படமாட்டாது.

More News >>