விரைவில் ஆட்டோகிராப் 2 ... சேரன் தகவல்

ஆட்டோகிராப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பதிலளித்துள்ளார் இயக்குநர் சேரன்.

கடந்த 2004-ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ஆட்டோகிராப். நிவின் பாலி நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட்டான மலையாளப் படமான பிரேமம் படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் என்று கூற கொண்டாடப்பட்டது. சேரன் இயக்கி தயாரிந்திருந்த ஆட்டோகிராப் படத்தில் கோபிகா, சினேகா, கனிகா, மல்லிகா என நான்கு நாயகிகள். தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்று இணையத்தில் சேரனிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு கண்டிப்பாக படம் வரும் என்று பதிலளித்துள்ளார் சேரன். ஆட்டோகிராப் 2 விரைவில் உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. சேரன் இயக்கத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, சமீபத்தில் வெளியான படம் திருமணம். திருமணம் என்கிற ஒற்றை நிகழ்ச்சிக்குள் நடக்கும் கலாட்டாக்களே திரைப்படத்தின் கதை. படம் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

More News >>