அய்யோ பேய்hellip ஹிந்தி காஞ்சனாவுல பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்கலாம் போல!
மெட்காலா 2019 பிங்க் கார்பெட் நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகைகள், பாடகிகள் மற்றும் இந்திய நடிகைகளான பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு மெட்காலா நிகழ்ச்சி கிறிஸ்துவ தீம் கொண்டு உருவாக்கப்பட்டு பல சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், இந்த ஆண்டு நோட்ஸ் ஆன் கேம்ப் எனும் 1964ம் ஆண்டு சூசன் சோண்டேக் அறிமுகப்படுத்திய ஃபேஷன் தீமை கொண்டு நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கணவர் நிக் ஜோனஸுடன் டிராமா தீமில் மேக்கப் போட்டு வந்துள்ள பிரியங்கா சோப்ராவை, சட்டென்று அல்ல, உற்றுப் பார்த்தாலும், அடையாளம் தெரியாத அளவுக்கு பேய் போல மேக்கப் போட்டு வந்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு முதல் மெட் காலாவில் கலந்து கொண்டு வரும் பிரியங்கா சோப்ரா, அணிந்து வரும் வித்தியாசமான உடைகள் பயங்கரமாக டிரோல் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு இப்படியொரு மேக்கப்பில் வந்திருக்கும் பிரியங்கா சோப்ரா மீம் கிரியேட்டர்களுக்கு மிகப்பெரிய தீனிப் போட்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
பாலிவுட்டில் காஞ்சனா படத்தை இயக்கி வரும் லாரன்ஸ் பிரியங்கா சோப்ராவை பேய் கேரக்டரில் நடிக்க வைக்கலாம் போல, அந்த அளவுக்கு பிரியங்கா சோப்ராவின் மேக்கப் உள்ளது.
ஆனால், பேஷனில் முத்திப்போன பிரியங்கா சோப்ராவின் வேற லெவல் டெடிகேஷன் தான் இந்த அளவுக்கு வித்தியாசமான மேக்கப்புடன் அவர் வர காரணம் என்றும், கடந்த ஆண்டு சிறந்த உடை உடுத்தியவர்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா இடம்பிடித்தார். இந்த ஆண்டும் மெட் காலாவின் சிறந்த உடை மற்றும் மேக்கப் செய்த பிரிவில் நிச்சயம் பரிசுகளை பிரியங்கா அள்ளுவார் என அவரது தீவிர விசிறிகள் முட்டுக் கொடுத்து வருகின்றனர்.
பிரியங்கா சோப்ராவின் மைத்துனரை மணந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகை!