நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருஷ்டி டாங்கே!
நீச்சல் குளத்தில் குளிக்கும் கவர்ச்சி புகைப்படங்களை நடிகை ஸ்ருஷ்டி டாங்கே சமூக வலைதளத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.
மேகா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. அந்த படத்தில் வரும் புத்தம் புது காலை ரீமேக் பாடலுக்கு ரம்மியமாக இவர் நடனமாடி, தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதன்பின்னர், வில் அம்பு, தர்மதுரை, டார்லிங், சமீபத்தில் வெளியான சத்ரு என 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நாயகியாக ஸ்ருஷ்டி நடித்துள்ளார்.
இந்நிலையில், நீச்சல் குளம் ஒன்றில், பிகினியுடன் ஸ்ருஷ்டி டாங்கே குளிக்கும் படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
26வயதாகும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே நடிகை ஹன்சிகாவின் தோழி ஆவார். நடிகை ஹன்சிகாவுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருவேன் என ஆரம்ப காலக் கட்டத்தில் ஸ்ருஷ்டி டாங்கே சவால் விட்டார். ஆனால், இவர் ஹன்சிகா லெவலுக்கு முன்னேறவில்லை. அதற்கு மாறாக ஹன்சிகா இவர் ரேஞ்சுக்கு பின் தங்கி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் மே 9ம் தேதி வெளியாகும் அதர்வாவின் 100 படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகாவுக்கு இந்த படமாவது கை கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மிஸ்டர் லோக்கலுடன் மோதல் இல்லையா? மீண்டும் தள்ளிப் போகிறதா விஜய்சேதுபதி படம்?