சிவகார்த்திகேயனுக்காக மீண்டும் இணைந்த யோகிபாபு சூரி காம்போ!

தமிழ் சினிமாவில் தற்போது தனித்தனியாக கலக்கி வரும் காமெடியன்களான யோகிபாபு மற்றும் சூரி சிவகார்த்திகேயனின் 16வது படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்க உள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தில் சூரி, யோகிபாபு பாக்ஸிங் ரிங் காட்சிகளில் அட்டகாசம் செய்திருப்பார்கள். அந்த படத்திற்கு பிறகு மீண்டும் எஸ்கே16 படத்தில் யோகிபாபு – சூரி காம்போ இணைந்து கலக்கவுள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள சிவகார்த்திகேயனின் 16வது படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல் என இரண்டு நாயகிகள் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு சிவகார்த்திகேயனின் வெற்றி இசையமைப்பாளரான இமான் இசையமைக்கிறார்.

நாளை, மே 8ம் தேதி சிவகார்த்திகேயனின் இந்த புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் அடுத்த வாரம் மே 17ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>