ருசியான குடைமிளகாய் சட்னி ரெசிபி

இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பரான சைட் குடைமிளகாய் சட்னி ரசம் எப்படி செய்றதுனு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பச்சை நிற குடை மிளகாய் 3

நசுக்கிய புளி ஒரு ஸ்பூன்

காய்ந்த மிளகாய் இரண்டு

எள் ஒரு டேபிள்ஸ்பூன்

தனியா 2 டேபிள்ஸ்பூன்

பெரிய வெங்காயம் 1

தக்காளி 1

எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்

நல்லெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்

கடுகு

உளுத்தம்பருப்பு

பெருங்காயம்

கறிவேப்பிலை

உப்பு தேவையான அளவு

செய்முறை:

தலில் வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்த மிளகாய் தனியா சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய குடைமிளகாய் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி இறக்கவும்.

பின்னர் அதை மிக்ஸியில் போட்டு உப்பு புளி வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும் பின்னர் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயம் கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த சட்னியுடன் பரிமாறவும்.

அவ்வளவுதாங்க சுவையான குடைமிளகாய் சட்னி ரெசிபி ரெடி..!

More News >>