புதுசா ட்ரை பண்ணுங்க.. வெந்தயக் கீரை இட்லி ரெசிபி

உடலுக்கு நன்மை தரும் வெந்தயக் கீரையைக் கொண்டு இட்லி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு 2 கப்

பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரை ஒரு கப்

தக்காளி ஒன்று

கடுகு

எண்ணெய் தலா ஒரு டீஸ்பூன்

சில்லி ப்ளேக்ஸ் அரை டேபிள்ஸ்பூன்

தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்

உப்பு சிறிதளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.

பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் அத்துடன் வெந்தயக்கீரை, உப்பு சேர்த்து வதக்கி சிறிது நேரம் மூடி வைக்கவும்.

பின்னர் தேங்காய் துருவலை தூவி கிளறி இறக்கவும்.

வழக்கம் போல் இட்லி தட்டில் அரை கரண்டி அளவு மாவை ஊற்றி அதன் மேல் 2 டேபிள்ஸ்பூன் அளவு வெந்தய கீரை கலவையை தூவவும். பின்னர் அதன் மேல் மீண்டும் இட்லி மாவை ஊற்றி மூடி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான வெந்தயக்கீரை இட்லி ரெடி..!

More News >>