சங்கத்தமிழனாக மாறிய விஜய்சேதுபதி விஜய் சந்தருக்கு இந்த படமாவது வெற்றியை கொடுக்குமா?
சிம்புவை வைத்து வாலு மற்றும் சீயான் விக்ரமை வைத்து ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய்சந்தர், தற்போது விஜய்சேதுபதியை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார்.
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு சங்கத் தமிழன் என்ற பெயரை வைத்துள்ளனர்.
இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கிறார். முன்னதாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் என இரு நாயகிகள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது நிவேதா பெத்துராஜ் படத்தில் இருக்கிறாரா இல்லையா என்ற தகவல் வெளியாகவில்லை.
ஸ்கெட்ச் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் ஸ்ரீமன் நடிக்கிறார். சூரி காமெடி ஏரியாவை கவனித்துக் கொள்கிறார்.
சங்கத்தமிழன் என்ற டைட்டில் மக்கள் செல்வனுக்கு நச்சென்று பொருந்தியிருப்பதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் சந்தர் இயக்கத்தில் வெளியான வாலு மற்றும் ஸ்கெட்ச் படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையிலும் அவருக்கு விஜய்சேதுபதி மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சங்கத்தமிழன் படத்தை வெற்றிப்படமாக கொடுப்பாரா விஜய் சந்தர் என பொறுத்திருந்து பார்ப்போம்.
நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருஷ்டி டாங்கே!