கின்னஸ் சாதனை படைத்த மனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவியாக மாறும் வித்யா பாலன்!
இந்தியாவின் பெண் கணித மேதை என்றும், மனித கம்ப்யூட்டர் என்றும் அழைக்கப்படும் சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில், சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன், பாரீஸ், நியூயார்க் படத்தையும் வெயிட்டிங் படத்தையும் இயக்கிய பெண் இயக்குநர் அனு மேனன் இயக்கத்தில் சகுந்தலா தேவி பயோபிக் உருவாகிறது. இந்த படத்தில் கணித மேதை சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை வித்யா பாலன் தேர்வாகியுள்ளார்.
பெங்களூருவில் பிறந்த சகுந்தலா தேவி, சர்கஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தந்தையின் மூலம் சிறு வயதிலேயே சீட்டுக் கட்டு வித்தைகள் மூலம் கணிதத்தை கற்றுக் கொண்டார். ஆறு வயது சிறுமியாக இருக்கும் போதே அவரது அபார கணித திறமையை கண்டு வியந்த அவரது தந்தை, தெருக்களில் கணித மேஜிக் நிகழ்ச்சியை நடத்த தொடங்கினார்.
அந்த நேரத்தில் மைசூர் பல்கலைக்கழகத்தில் கணித ஆற்றலை ஆறு வயது சிறுமி சகுந்தலா தேவி வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார். பின்னர், 8 வயதில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனது கணித ஆற்றலை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
பின்னர், லண்டன் சென்ற சகுந்தலா தேவி கணிதத்தில் உலகமுழுவதும் பல சாதனைகளை நிகழ்த்தி காட்டினார்.
இந்தியாவில் முதன் முதலாக ஹோமோசெக்ஸ் குறித்த The World of Homosexuals புத்தகத்தை எழுதி மிகப்பெரிய சர்ச்சையையும் ஓரினச்சேர்க்கையாளர்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள் அவர்களுக்கான சுதந்திரம் தேவை என்ற புரட்சியையும் வெடிக்க வைத்தவரான சகுந்தலா தேவியின் வாழ்க்கையில் பல சுவாரஸ்யங்கள் இருப்பதால், நிச்சயமாக சரியான பயோபிக் படமாக இது உருவாகும் என இப்போதே எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக அரசை கவிழ்க்க திமுக ஒத்துழைக்கணும்...! இல்லைன்னா பயப்படுறீங்கனு அர்த்தம்...! தங்க. தமிழ்ச்செல்வன் தடாலடி