உடலுறவுக்கு மறுத்த பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் வெளியீடு
உடலுறவுக்கு மறுத்ததால், பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அகமதாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது பாட்டி வீட்டுக்கு சென்றிருந்த போது, அங்கு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணுக்கு தெரியாமல் அவர் குளிக்கும் போதும், உடை மாற்றும் போதும் ரகசிய கேமராவில் அந்த பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்துள்ளார்.
பின்னர், அந்த பெண்ணை மிரட்டி தன்னுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால், அவரது மிரட்டலுக்கு அந்த பெண் அடிபணியவில்லை. இதனால், போலி பேஸ்புக் கணக்கை துவங்கிய அந்த நபர், அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.
இதனை அறிந்த அந்த பெண் மிகவும் மனம் உடைந்த நிலையில், தனது பெற்றோரிடம் நடந்தவற்றை சொல்ல, அவர்கள் போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்தனர். சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் அந்த கையவனை கண்டுபிடித்த போலீசார் அவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பார்வதியின் துணிவுக்கு ஒரு சல்யூட்... உயரே விமர்சனம்