மீண்டும் தள்ளிப்போன அவதார் 2 இவ்ளோ லேட் பண்ணா எப்படி ஜேம்ஸ் கேமரூன்?
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது. 25 ஆயிரம் கோடி வசூலை ஈட்டி, இதுவரையில் வெளியான ஹாலிவுட் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக அவதார் இன்றளவும் முதலிடத்தில் இருக்கிறது.
இந்நிலையில், அவதார் 2, 3, 4ம் பாகங்களை ஜேம்ஸ் கேமரூன் இயக்கி வருவதாக செய்திகள் வெளியாகின.
பல ஆண்டுகளாக செய்திகள் மட்டுமே வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. அவதார் படத்தின் 2ம் பாகம் 2018ம் ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த தேதி பின்னர் மாற்றப்பட்டு, 2020ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டமாக அவதார் வெளியாகும் என்றும் அடுத்தடுத்த பாகங்கள் 2021, 2022 என வரிசையாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது அவதார் படக்குழுவிடம் இருந்து புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால், அவதார் 2 படம் 2021ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவதார் படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து இந்த செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டோரா உலகையும், அந்த நீல நிற மனிதர்களையும் காண நாம் இன்னும் 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமாம்.
ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா சூப்பர் கிங்ஸ் ..? மும்பையுடனான புள்ளி விபரம் இடிக்குதே..?