ஈரோடு முதலிடம்.. வேலூர் கடைசி இடம்.. இது பிளஸ் 1 தேர்ச்சி ரிசல்ட்!
தமிழகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி தொடங்கி 22ம் தேதி முடிவடைந்த பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.
எப்பவுமே ஆல் பாஸ் செய்யப்பட்டு பன்னிரண்டாம் வகுப்புக்கு அனுப்பப்படும் பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு வைக்கப்படுவதால், ஆல் பாஸ் என்ற கான்செப்ட் மாறியுள்ளது.
இந்த ஆண்டு தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதிய பிளஸ் 1 மாணவர்களில் 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், ஈரோடு மாவட்டம் 98.08 சதவீதத் தேர்ச்சியுடன் முதலிடத்திலும் வேலூர் மாவட்டம் 89.29 சதவீதத் தேர்ச்சியுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
97.90 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் இரண்டாம் இடத்தையும் 97.60 சதவீத தேர்ச்சியுடன் ஜஸ்ட் மிஸ்சில் கோவை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
8 லட்சம் பேர் எழுதிய பிளஸ் 1 தேர்வில் வழக்கம்போல் மாணவியர் 96.5 சதவீதமும் மாணவர்கள் 93.3 சதவீதத் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி முடிவுகளை அறிந்து கொள்ள www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். நீங்கள் பதிவுசெய்துள்ள மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகள் வந்துவிடும்.