ஷங்கரை ஓவர்டேக் செய்த பா.ரஞ்சித்

ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் மிக பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் 2.0. இதில், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், கடந்த ஜனவரி மாதமே வெளியிடப்பட இருந்தது. ஆனால், கிராபிக்ஸ் வேலைகள் பாக்கி இருப்பதை அடுத்து, ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

2.0 படப்பிடிப்பு முடிந்த நிலையில், ரஜினி அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால், வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

More News >>