மத்தி மீன் குழம்பு ரெசிபி

கமகமக்கும் மத்தி மீன் குழம்பு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

மத்தி மீன் - கால் கிலோ

சின்ன வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 100 கிராம்

பூண்டு - 25 கிராம்

எண்ணெய் - தேவையான அளவு

தேங்காய்ப் பால் - ஒரு கப்

புளி - எலுமிச்சைப் பழம் அளவு

கடுகு - கால் டீஸ்பூன்

வெந்தயம் - கால் டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - தேவையான அளவு

சீரகத் தூள் - அரை டீஸ்பூன்

மல்லித் தூள் - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிளை

பச்சை மிளகாய் - 3

கொத்தமல்லித்தழை

உப்பு

செய்முறை:

ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிளை சேர்த்து தாளிக்கவும்.

பிறகு, நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

மசாலாவின் பச்சை வாசனைப் போனப் பிறகு புளிக் கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும். அத்துடன், தேங்காய்ப்பால் சேர்த்து கொதிவந்தப் பிறகு சுத்தம் செய்த மத்தி மீன்களைப் போட்டு சில நிமிடங்கள் வேகவிடவும்.

இறுதியாக, கீறிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவைறயான மத்தி மீன் குழம்பு ரெடி..!

More News >>