வெளியேறியது ஐதராபாத் சென்னையை சந்திக்கிறது டெல்லி அணி!

விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி வீரர்கள் நிதானமான தொடக்கத்தை தந்து ஆடினார். ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் விளாசி 56 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய ரிஷப் பன்ட் 21 பந்துகளில் அதிரடியாக 5 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் விளாசி 49 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்குமார் பந்துவீச்சில் நபியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். இதனால், அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

ரிஷப் பன்ட் அவுட்டான பிறகு, டெல்லி அணி வீரர்களும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

கடைசி ஓவர் வரை நீடித்த மேட்ச் கீமோ பாலின் உதவியால் 19.5 ஓவரில் 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. எலிமினேட்டர் சுற்றில் தோல்வியடைந்த ஐதராபாத் அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

வெற்றி பெற்றுள்ள டெல்லி அணி நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத டெல்லி அணி இந்த முறை ஆரம்பம் முதலே வலுவான ஆட்டத்தை ஆடி வருவதால், அடுத்த போட்டி மேலும் விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிப்போட்டியில் மும்பை அணியை டெல்லி அணி எதிர்க்குமா அல்லது ஹாட்ரிக் தோல்விக்கு பழி வாங்க சென்னை அணி வெற்றி பெறுமா என்பதை காத்திருந்து பார்ப்போம்.

ஐபிஎல்: டாஸ்ல ஜெயிச்ச டெல்லி அணி மேட்ச்சையும் ஜெயிக்குமா?
More News >>