பிரித்திவி, ரிஷப் களத்தில் இருந்தால்.... வெற்றியை விவரிக்கும் ஸ்ரேயாஸ் அய்யர்

விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. 163 ரன்கள் தான் டார்கெட் என்றாலும் கடைசி ஓவரில் தான் டெல்லி அணிக்கு வெற்றி சாத்தியமானது. வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த ரிஷப் பன்ட் 21 பந்துகளில் அதிரடியாக 5 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் விளாசி 49 ரன்கள் எடுத்தார்.

வெற்றிக்கு பின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேசியுள்ளார். அதில், ``கடைசி ஓவரில் எனது உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியவில்லை. உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த போது அந்த கடைசி இரண்டு ஓவர்களும் நரகம் தான். இருப்பினும் வெற்றி பெற்ற பின் இருந்து மகிழ்ச்சிக்கு அளவில்லை. எல்லோரது முகத்திலும் அந்த மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது. சென்னைக்கு எதிரான போட்டியிலும் இந்த வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன்.

முதலில் மார்டின் கப்தில் அதிரடியாக விளையாடியதை பார்க்கும் போது சன்ரைசர்ஸ் அணி பெரிய ஸ்கோரை எடுப்பார்கள் என நினைத்தேன். நல்லவேளை அமித் மிஸ்ரா அவரை கட்டுப்படுத்திவிட்டார். 163 ரன்கள் என்பது எட்டக்கூடிய டார்கெட் தான். பிரித்திவி, ரிஷப் ஆகியோர் களத்தில் இருக்கும்போது இது போதாது. இவர்கள் இருவரையும் கட்டுப்படுத்த முடியாது என நினைக்கிறேன். அவர்களது ஸ்டைலில் விளையாடினால் அவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. முயற்சிகள் வீணாகும். அவர்கள் களத்தில் இருக்கும் வரை வெற்றியை பற்றிய கவலை தேவையில்லை" எனக் கூறினார்.

பெங்களூருவை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி அணி!
More News >>