ராகுலை விட்டுவிட்டு ராஜீவ் காந்தியை விமர்சிப்பதா?- மோடிக்கு பாஜகவிலேயே எதிர்ப்பு
ராகுல் காந்தியின் விமர்சனங்களுக்கு அவருக்குத்தான் பதிலடி கொடுக்க வேண்டுமே தவிர, அவருடைய தந்தை மறைந்து விட்ட ராஜீவ் காந்தியைப் பற்றி விமர்சிப்பது நியாயமில்லை என்று பிரதமர் மோடியின் கருத்துக்கு பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மக்களவைத் தேர்தல் களத்தில் பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் நடந்து வருகிறது. நாட்டின் காவலாளி என மோடி தன்னை பெருமையாகக் கூறுகிறார். ஆனால் ரபேல் விவகாரத்தில் மோடி மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டி வந்த ராகுல் காந்தி, கடைசியில் மோடியை திருடன் என்று விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்.
ராகுல் காந்தி தம்மை திருடன் என்று விமர்சிப்பதை பொறுக்க முடியாத மோடி, திடீரென ராகுலின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி பற்றி முன்வைத்த விமர்சனம், இப்போது நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மிஸ்டர் கிளீன் என்று கூறப்பட்ட ராஜீவ் காந்தி, இறக்கும் போது நம்பர் ஒன் ஊழல்வாதியாக மறைந்தார் என்ற மோடியின் விமர்சனம், எதிர்க்கட்சிகள், நடுநிலையாளர்களை மட்டுமின்றி பாஜகவுக்குள்ளேயே அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் தொகுதி பாஜக வேட்பாளரும், வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராகவும், ஏற்கனவே 5 முறை எம்.பி.யாருவும் இருந்த மூத்த தலைவரான ஸ்ரீனிவாசராவ் என்பவர் மோடியின் , ராஜீவ் காந்தி பற்றிய விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மைசூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இப்போது மோடிக்கும் ராகுல் காந்திக்டும் தான் போட்டி .அதனால் குற்றம் சுமத்தும் ராகுல் காந்திக்குத்தான் உரிய பதிலடி கொடுக்க வேண்டும். அதை விட்டு இளம் வயதில் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு, மறைந்த தலைவர் ராஜீவ் காந்தியைப் பற்றி விமர்சிப்பது நியாயமில்லை.
கால் நூற்றாண்டுக்கு முன் எம்.பி.யாக இருந்த போது, ராஜீவ் காந்தியின் நடவடிக்கைகளை அருகில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் அவர் இந்த நாட்டின் மீது அவ்வளவு அக்கறை கொண்டிருந்தார்.போ பார்ஸ் விவகாரத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது கூட, என் மீது குற்றம் நிரூபணம் ஆனால் சிறை செல்லத் தயார் என்று ராஜீவ் தைரியமாக கூறினார். பின்னர் நிரபராதி என்று நீதிமன்றம் கூறி விட்ட நிலையில் ராஜீவை ஊழல்வாதி என்பது சரியல்ல என்று ஸ்ரீனிவாசராவ் கருத்து தெரிவித்துள்ளார்.ஸ்ரீனிவாசராவின் இந்தக் கருத்துக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தேனி ஓட்டு மிஷினில் தில்லு முல்லா..? என்னமோ நடக்குது... எல்லாமே மர்மமா இருக்குது...!