ஏழு பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு - தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த வழக்கில், தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அமைச்சரவையும் கூடி தீர்மானம் நிறைவேற்றி, அந்தக் கோப்பு ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏழு பேரின் விடுதலை தற்போது ஆளுநரின் ஒற்றைக் கையெழுத்தில் வந்து நிற்கிறது. ஆளுநரின் காலதாமதத்தால் அவர்களின் விடுதலை தாமதமாகியுள்ளது.

இதற்கிடையே, ஏழு பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசின் அமெரிக்கை நாராயணன், ராம சுகந்தன் மற்றும் குண்டுவெடிப்பில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினரும் இணைந்து வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததது. தமிழக ஆளுநரின் பரிசீலனையில் இந்த வழக்கு உள்ளது. இதனால் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் முடிவெடுக்க முடியாது. விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

சபாநாயகர் நோட்டீசுக்கு விளக்கம் கொடுக்கணுமா? - கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுக்கு வந்த சந்தேகம்
More News >>