குஜராத்தி ஸ்டைல் குடைமிளகாய் பொரியல்..!
சுவையான குஜராத்தி ஸ்டைல் குடைமிளகாய் பொரியல் எப்படி செய்றதுன்னு பார்க்கலாமா..?
தேவையான பொருட்கள்:
சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிற குடைமிளகாய் - 2 கப் (நறுக்கியது)கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்சீரகப் பொடி - 1 டீஸ்பூன்மல்லி தூள் - 1 டீஸ்பூன்வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)கடுகு - 1/4 டீஸ்பூன்உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்செய்முறை:
முதலில் கடலை மாவு, மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒரு பௌலில் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள கடலை மாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து, தனியாக ஒரு பௌலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு குடைமிளகாய் சேர்த்து பாதியாக வேகும் வரை வதக்கி விட வேண்டும்.
பின் அதில் வறுத்து வைத்துள்ள மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, சிறிது நேரம் அனைத்து பொருட்களும் ஒன்று சேரும் வரை வேக வைத்து இறக்கினால், சுவையான குஜராத்தி ஸ்டைல் குடைமிளகாய் பொரியல் ரெடி!!!