மீண்டும் உடைந்ததா டைட்டானிக் ஜேம்ஸ் கேமரூன் ட்வீட் என்ன சொல்கிறது தெரியுமா?

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான டைட்டானிக் படம் தான் இதுவரை ஹாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது இடத்தில் இருந்து வந்தது.

22 ஆண்டுகளாக அசைக்க முடியாத பாக்ஸ் ஆபிஸ் சாதனையை பிடித்து வைத்திருந்த டைட்டானிக் படத்தை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் ரிலீசான 11 நாட்களிலேயே முறியடித்துள்ளது.

2.187 பில்லியன் டாலர்கள் வசூலுடன் இரண்டாம் இடத்தில் இருந்த டைட்டானிக் படத்தின் வசூலை முந்தியுள்ளது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம். இதனை பாராட்டும் விதமாக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஜேம்ஸ் கேமரூன்.

அந்த ட்வீட்டில், நிஜ டைட்டானிக்கை ஐஸ் பெர்க் எப்படி உடைத்ததோ அதே போல என்னுடைய டைட்டானிக் பாக்ஸ் ஆபிஸை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் உடைத்துள்ளது.

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் டீமுக்கு என்னுடைய வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

இரண்டாம் இடத்தில் இருந்த டைட்டானிக்கை பின்னுக்குத் தள்ளிய அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் அடுத்ததாக 25 ஆயிரம் கோடி வசூலுடன் முதலிடத்தில் இருக்கும் அதே ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் படத்தின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடிக்குமா என ஹாலிவுட்டே வியந்து பார்த்துக் கொண்டு இருக்கிறது.

ஒரு டான் ஸ்டோரி பண்ணனும்... அஜித்தின் திடீர் ஆசை
More News >>