ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் கீமா நோன்பு கஞ்சி ரெசிபி

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வீட்டிலேயே சுவையான மட்டன் கீமா நோன்பு கஞ்சி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - ஒரு தம்ளர்

மட்டன் - 200 கிராம்

தேங்காய்ப் பால் - ஒன்றரை கப்

பெரிய தக்காளி - 1

வெங்காயம் - 1

கடலை பருப்பு - கால் கப்

வெந்தயம் - முக்கால் கப்

பட்டை - 2

கிராம்பு - 4

மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

கேரட் - 2

எண்ணெய்

நெய்

புதினா

கொத்தமல்லித் தழை

கறிவேப்பிலை

உப்பு தேவையான அளவு

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.

பிறகு வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அத்துடன், தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின்னர், மட்டன், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும்.

நறுக்கிய கேரட், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். கூடவே, மிளகாய்த்தூள் முக்கால் டீஸ்பூன், கடலை பருப்பு, ஊறவைத்த பச்சரிசி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

இறுதியாக, நான்கு தம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறி குக்கர் மூடிப்போட்டு 5 விசில் விடவும்.

விசில் வந்ததும் கலவை வெந்திருப்பதை உறுதி செய்யவும். பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

அவ்ளோதாங்க.. சுவையான நோன்பு கஞ்சி ரெடி..!

More News >>