விசுவாசம் படத்தில் அஜித்திற்கு ஜோடி இவர் தான்.. கன்பார்ம்

அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தின் ஹீரோயின் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருந்த படக்குழு தற்போது அதன் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் படம் ‘விசுவாசம்’. இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் இவர்களை தவரி படத்தில் வேறு யாரெல்லாம் நடிப்பது என்பது குறித்த தகவல் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், விசுவாசம் படத்தின் ஹீரோயின் நயன்தாரா என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித், நயன்தாரா இருவரும் ஆரம்பம் படத்திற்கு பிறகு விசுவாசம் படத்தில் ஜோடிபோடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>