வாக்கு எண்ணிக்கையில் ரகளை செய்ய ஓபிஎஸ் சூழ்ச்சி - தங்க.தமிழ்ச்செல்வன் பகீர் புகார்

வாக்கு எண்ணிக்கையின் போது ரகளை செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் முன் எச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் என்று அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் புகார் வாசித்துள்ளார்.

தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து அமமுக சார்பில் போட்டியிட்டவர் தங்க. தமிழ்ச்செல்வன். தற்போது இடைத் தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம் தொகுதியில், அமமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தங்க. தமிழ்ச்செல்வன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக தினமும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து அவரை கடுப்பேற்றி வருகிறார்.

தேர்தல் முடிவுக்கு பிறகு ஓபிஎஸ் பாஜகவுக்கு செல்லப் போகிறார் என்று தினமும் அடித்துச் சொல்லி வரும் தங்க தமிழ்ச் செல்வன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவில் ஓபிஎஸ்எக்கும் இபிஎஸ்சுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக தரப்பில் ரகளை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் சுயேட்சை வேட்பாளர்களின் ஏஜன்டுகளை விலை பேசியுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் 1000 , 1500 பேரை குவிக்க உள்ளன ர். முதல் ரவுண்டிலேயே முடிவுகள் அதிமுகவுக்கு பாதகமாகத் தான் வரப் போகிறது என்பது தெரிந்து விட்டது. இதனால் ரகளை செய்து ஓட்டு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்ய திட்டமிட்டுள்ளனர். அதிமுகவுக்கு சாதகமாக ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வரும் தேர்தல் ஆணையம், ஓட்டு எண்ணிக்கையின் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் தங்க.தமிழ்ப் செல்வன்.

மேலும் அவர் கூறுகையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது உறுதி என்றார். தங்களுக்கு பதவி ஆசை கிடையாது.அப்படி இருந்திருந்தால் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்போம் என்றும் தடாலடியாக தெரிவித்துள்ளார்.

கின்னஸ் சாதனை படைத்த மனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவியாக மாறும் வித்யா பாலன்!
More News >>