கோடி கோடியாக சம்பளத்தை உயர்த்தும் அஜித் அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம்
அஜித் கேட்ட சம்பளத்தால் தயாரிப்பு தரப்பு அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறது. அப்படி எவ்வளவு சம்பளம் கேட்டார் அஜித் தெரியுமா?
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்பொழுது உருவாகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பு முடிவடைந்து, தற்பொழுது இறுதிகட்ட பணிகளில் இருக்கிறது படக்குழு. இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை முடித்த கையோடு, மீண்டும் போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் தான் அஜித் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் வேறு ஒரு புதிய தயாரிப்பு நிறுவனம் அஜித்தை சந்தித்துப் பேசியிருக்கிறது. அப்போது, அஜித் தரப்பில் அறுபது கோடி சம்பளம் தந்தால் நடிக்க தயார் என்று சொல்லியிருக்கிறார்கள். இதை கேட்டு அந்த தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாம்.
அஜித்துக்கு விவேகம் சூ ப்பர் பிளாப் என்றால் விஸ்வாசம் சூப்பர் ஹிட். ஒரு படம் ஹிட்டானாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி தன்னுடைய சம்பளத்தை உயர்த்திக் கொண்டே செல்கிறார் அஜித். அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல ஐந்து ஐந்து கோடியாக உயர்த்துகிறாராம். இந்த மனநிலையை எப்போது மாற்றுவார் அஜித் என்பதும் தெரியவில்லை. ஆனால் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அஜித் வெளியே தெரியாமல் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார்.
மாநகராட்சி நோட்டீஸ் .! வாடகை வீட்டை காலி செய்த நல்லகண்ணு!