பிட்காயின் வைத்திருப்பவர்கள் இந்தியாவில் ஒரு லட்சம் வரி அவசியம் கட்டனும் - மத்திய வாரியம் எச்சரிக்கை

பிட்காயின் வைத்திருப்பவர்கள் வரி கட்ட வேண்டும் என மத்திய நேரடி வரி வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுவான வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனைகளுக்கு நேரெதிரான மற்றும் முற்றிலும் இணையம் சார்ந்த மின்னணு பணப்பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி வகையை சார்ந்தது பிட்காயின். இது, உலகம் முழுவதும் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

தற்போது ஒரு பிட்காயினின் மதிப்பு 10,000 டாலர்களை கடந்துவிட்டதால் மீண்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 9,000 டாலர்களில் இருந்து 10,000 டாலர்களை கடப்பதற்கு அது ஒரு சில நாட்களையே எடுத்துக்கொண்டது. சமீபத்திய ஏற்றத்தின்படி இந்தியாவில் ஒரு பிட்காயினின் மதிப்பு 8,76,226 ரூபாய் ஆகும்.

இந்நிலையில், பிட்காயின் வைத்திருப்பவர்கள் வரி கட்ட வேண்டும் என மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பிட்காயின் வைத்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது வரிகட்டும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து, மத்திய நேரடி வரி வாரிய தலைவர் சிஷில் சந்திரா கூறுகையில், “பிட்காயினில் முதலீடு செய்திருப்பவர்கள் குறித்த சரியான விவரம் எங்களுக்கு கிடைக்கவில்லை. இது குறித்து இந்தியா முழுவதிலும் உள்ள வருமானத்துறை நிர்வாகிகளுக்கு தகவல் அளித்துள்ளோம். அவர்கள் வரி செலுத்த வேண்டியவர்களுக்கு நோட்டிஸ் அனுப்புவார்கள்.

பிட்காயின் எனப்படும் மின்னணு பணம் மூலம் வருமானம் ஈட்டியவர்கள் வருமான வரி கட்ட வேண்டும். அந்த வருமானத்திற்கான வழி குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும். வரி கட்ட தவறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>