நாளை 6ம் கட்ட வாக்குப்பதிவு எத்தனை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது தெரியுமா?

மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாளை மே 12ம் தேதி நடைபெறவுள்ள ஆறாம் கட்ட தேர்தலில் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்தியாவை அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு ஆளப் போகிறது யார் என்று தீர்மானிக்கும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.

நாளை ஆறாம் கட்ட வாக்குப்பதிவு பீகார், ஹரியானா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் டெல்லி ஆகிய 7 மாநிலங்களில் நடைபெறுகிறது.

பீகார் மாநிலத்தில் உள்ள வால்மீகி நகர், பஸ்சிம் சம்பரன், பூர்வி சம்பரன், ஷியோஹர், வைஷாலி, கோபால்கஞ்ச், சீவான், மகாராஜ்கஞ்ச் ஆகிய 8 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடக்கிறது.

ஹரியானாவில் உள்ள அம்பாலா, குருஷேத்ரா, சிர்ஸா, ஹிசர், கர்னல், சோனிபட், ரோடாக், பிவானி, குர்கான், ஃபரிதாபாத் என 10 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

ஜார்கண்டில் உள்ள கிரிதி, தன்பாத், ஜம்ஷத்பூர், சிங்பம் என்ற 4 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடக்கிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 8 மக்களவைத் தொகுதிகளான மொரினா, பிந்த், குவாலியர், குணா, சாகர், விதிஷா, போபால், ராய்கார் தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.

இதேபோல உத்தரபிரதேசத்தில் உள்ள சுல்தான் பூர், பிரதாப்கர், புல்புர், அலகாபாத், அம்பேத்கார் நகர், சரஸ்வதி, தோமரியாகஞ்ச், பாஸ்தி, சாண்ட் கபீர் நகர், லால்கஞ்ச், அஜாம்நகர், ஜான்பூர், மச்லிசாஹர் மற்றும் பாதோகி என 14 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

மேற்குவங்கத்தில் உள்ள தம்லக், கந்தி, காடல், ஜார்கிராம், மெதினிபூர், புருளியா, பன்குரா, பிஷ்னாபூருக்கும், டெல்லியில் உள்ள சாந்தினி சவுக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புது டெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி மற்றும் தெற்கு டெல்லி என 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், பிராக்யா தாக்கூர், திக்விஜய் சிங், மேனகா காந்தி, பூபேந்தர் ஹூடா உள்ளிட்ட பிரபல வேட்பாளர்களுக்கான தேர்தல் நாளை நடைபெற இருப்பதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

More News >>