உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற துபாய் ஃபிரேம்!
புகைப்பட ஃபிரேம் போன்ற வடிவில் துபாயில் உள்ள ஜபீல் பூங்கா அருகே பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள துபாய் ஃபிரேம் அதிகாரப்பூர்வமாக உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
துபாயின் அதிசயமான இந்த கட்டடம் கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி திறக்கப்பட்டது. 150.24மீ., உயரமும் 95.53மீ., அகலமும் கொண்ட இந்த பிரம்மாண்ட ஃபிரேம் கட்டடம் உலகின் பிரம்மாண்ட ஃபிரேம் கட்டடம் என்ற கின்னஸ் சாதனையை தற்போது வென்றுள்ளது.
உலகின் அதிசயமான கட்டடமான இந்த இடம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இங்கு சென்று பார்க்க பெரியவர்களுக்கு 50 திர்ஹாம் கட்டணும், சிறியவர்களுக்கு 20 திர்ஹாம் கட்டணமும் வசூலிக்கப்படுகின்றன.
துபாய் நகராட்சி தலைவரான அல் ஹஜ்ரி கூறுகையில், கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி திறக்கப்பட்ட இந்த கட்டடத்தை இதுவரை 4 லட்சத்து 66 ஆயிரம் பேர் கண்டு ரசித்து சென்றுள்ளதாக தெரிவித்தார்.