ரிச்சான சுவையில்.. பாதாம் புட்டிங் ரெசிபி
வீட்டிலேயே சுவையான பாதாம் புட்டிங் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
சீனா கிராஸ் - 10 கிராம்
பாதாம் - அரை கப்
காய்ச்சியப் பால் - 600 மி.லி.,
சர்க்கரை - அரை கப்
மில்க் மேய்ட் - கால் கப்
வெண்ணிலா எசென்ஸ் - சில துளிகள்
நறுக்கிய பாதாம், பிஸ்தா - கால் கப்
செய்முறை:
முதலில், ஒரு பாத்திரத்தில் சீனா கிராஸைப் போட்டு சுமார் அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு, இதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து உருக வைத்து வடிகட்ட வைக்கவும்.
அதனுடன், பாதாம் பருப்பை இரவில் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, தோலை நீக்கி மையாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி சூடானதும் பாதாம் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வேக வைக்கவும்.
பின்னர், சர்க்கரை, மில்க் மேய்ட், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கொதிக்கவிடவும்.
அடுப்பை நிறுத்திவிட்டு இந்த கலவையை ஒரு தட்டில் ஊற்றி ஆறவைத்து அதன் மீது நறுக்கிய பாதாம், பிஸ்தா தூவி பிரிட்ஜ்ஜில் சுமார் 4 மணி நேரம் வைத்து எடுத்து துண்டுகள் போட்டு பரிமாறவும்.
அவ்ளோதாங்க.. சுவையான.. ரிச்சான.. பாதாம் புட்டிங் ரெசிபி ரெடி..!