ரோட்டுக் கடை முட்டை கலக்கி ரெசிபி

முட்டையில் புதுவித ரெசிபியான கலக்கி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

முட்டை 

மிளகுத் தூள்

கொத்தமல்லித்தழை

உப்பு

செய்முறை:

முதலில் தோசைத் தவாவை அடுப்பில் வைத்து சூடாக்கவும். பிறகு, ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் சிறிதளவு மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

இதனை, தோசைத் தவாவில் ஊற்றி பரப்பவும். அதன், ஓரங்கள் வெந்ததும் நான்கு பக்கமும் மடித்துப் போடவும். முட்டை அரை வேக்காடாக இருக்க வேண்டும்.

இதனை ஒரு நிமிடம் திருப்பிப்போட்டு எடுக்கவும். இதன் மீது, மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை தூவி பரிமாறினால் சுவையான முட்டை கலக்கி ரெடி..!

முட்டையை அடிக்கும்போது கூடவே சிக்கன் அல்லது மட்டன் கிரேவி ஊற்றி அடித்து கலக்கி செய்தால் அபாரமான சுவையாக இருக்கும்..

More News >>