21-ந்தேதி டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டம்...! மம்தா, மாயாவதி புறக்கணிப்பு ஏன்.? காரணம் இதுதான்..!

ஓட்டு எண்ணிக்கைக்கு முன்னதாக வரும் 21-ந் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், மம்தாவும் மாயாவதியும் பங்கேற்பது சந்தேகம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் பதவிக்கான போட்டியில் இருவரும் உள்ளதே இந்த புறக்கணிப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட மக்களவைத் தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்து இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை 23-ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக 21-ந் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த சில நாட்களாக தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி வந்த சந்திரபாபு நாயுடு, வாக்கு எந்திரத்தில் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தேர்தல் ஆணையத்தில் 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்களை ஒன்று திரட்டினார். அப்போதே 21-ந் தேதி நடைபெற உள்ள கூட்டத்திலும் இந்தத் தலைவர்கள் பங்கேற்பது உறுதி என கூறப்பட்டது.

இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் மே.வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரசுக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்கள் கிடைக்காதபட்சத்தில், மாயாவதி, மம்தா, அகிலேஷ் ஆகியோர் எடுக்கும் முடிவுகள் அடுத்த ஆட்சியை முடிவு செய்யும் எனக் கூறப்படுகிறது.

இது வரை நடந்து முடிந்துள்ள தேர்தலில் உ.பி.யில் மாயாவதி - அகிலேஷ் கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்குப் படுகிறது. இதேபோல் மே.வங்கத்தில் மம்தாவும், கடந்த முறை கிடைத்தது போல் இம்முறையும் வெற்றி கிட்டும் என்று எதிர்பார்க்கிறார். இதனால் பிரதமர் பதவி ஆசையில் உள்ள மாயாவதியும், மம்தாவும் தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்று காங்கிரசுக்கு சாதகமாக எந்த பிடியும் கொடுத்துவிடக் கூடாது என்று கருதுவதே புறக்கணிப்புக்கு காரணம் எனத் தெரிகிறது.

4 தொகுதிகள்...! 8 லட்சம் வாக்காளர்கள் ..! ஓட்டுக்கு ரூ.1000...! ரூ.80 கோடி பட்டுவாடா செய்த அமமுக
More News >>